×

கிருஷ்ணகிரி அருகே வியாபாரி திடீர் மாயம்

கிருஷ்ணகிரி, ஜன.8: கிருஷ்ணகிரி மகராஜகடை அருகே, போத்திநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அனிஷ்(30). மாங்காய் வியாபாரியான இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றார். பின்னர், திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ரோஷினி, மகராஜகடை போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே வியாபாரி திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Anish ,Bodhinayanapally ,Maharajakadai ,Roshini ,Maharajakadai… ,
× RELATED சிஆர்பிஎப் டிஜி அனிஷ் தயாள் ஓய்வு