×

மது பதுக்கி விற்றவர் கைது

சூளகிரி, ஜன.8: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே புக்காசாகரம் பகுதியில் மது பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பேரிகை போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, இரவு நேரத்தில் சுற்றித்திரிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் ரமேஷ்(50) என்பவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், மது பதுக்கி விற்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post மது பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Soolagiri ,Bukkasagaram ,Perigai ,Krishnagiri district ,Munusamy ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி முதியவர் பலி