- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விஜய்
- வதோதரா
- விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டி
- ராஜஸ்தான்
- அபிஜித்…
- விஜய் ஹசாரே டிராபி
- தின மலர்
வதோரா: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முந்தைய முதல்நிலை காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று வதோராவில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான்-தமிழ்நாடு அணிகள் மோதின. தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்ய ராஜஸ்தான் முதலில் களமிறங்கியது. அபிஜித் தோமர், கேப்டன் மஹிபால் லோமரர் ஆகியோர் அதிரடியாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 160ரன் சேர்த்தனர். அபிஜித் 111ரன்னிலும், மஹிபால் 60 ரன்னிலும் வெளியேற்றினார் வருண் சக்கரவர்த்தி. அதன் பிறகு வந்தவர்களின் கார்த்தி சர்மா மட்டும் 35ரன் எடுத்தார்.
மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியின் திரும்ப ராஜஸ்தான் 47.3ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 267ரன் எடுத்தது. தமிழ்நாடு வீரர்களில் வருண் சக்கரவர்த்தி மீண்டும் 5 விக்கெட்களை அள்ள கேப்டன் சாய் கிஷோர், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர். அதனையடுத்து தமிழ்நாடு 268ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கியது.
ஆனால் அந்த அணியில் நாரயண் ஜெகதீசன் 65(ஒரே ஓவரில் 6 பவுண்டரி), விஜய் சங்கர் 49, பாபா இந்தரஜித் 37, முகமது அலி 34 ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேற தமிழ்நாடு 47.1ஓவரில் 248ரன்னுக்கு அடங்கியது. அதனால் ராஜஸ்தான் 19ரன் வித்தியாசத்தில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் வீரர்களில் அமன் ஷெகாவத் 3, அனிகத் சவுத்ரி, அஜய் சிங் தலா 2விக்கெட் கைப்பற்றினர். கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறிய தமிழ்நாடு இந்த முறை காலிறுதிக்கு முன்பே வாய்ப்பை இழந்தது.
* அரியானா வெற்றி
அரியானா-பெங்கால் அணிகள் 2வது ஆட்டத்தில் களம் கண்டன. முதலில் விளையாடிய அரியானா 50ஓவர் முடிவில் 9 வி க்கெட்களை இழந்து 298ரன் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 64, பார்த் வத்ஸ் 62, சுமித் குமார் ஆட்டமிழக்காமல் 41ரன் எடுத்தனர். பெங்கால் தரப்பில் முகமது ஷமி 3, முகேஷ் குமார் 2 விக்கெட் கைப்பற்றினர்.
அதனையடுத்து 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்கால் 43.1ஓவருக்கு 226ரன்னில் சுருண்டது. அதனால் அரியானா 72ரன்னில் வெற்றிப் பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. பெங்கால் தரப்பில் அபிஷேக் பொரேல் 57, கேப்டன் சுதிப் குமார், அனுஸ்துப் மஜூம்தார் தலா 36ரன் எடுத்தனர். அரியானாவின் பார்த் வத்ஸ் 3விக்கெட் எடுத்தார்.
The post விஜய் ஹசாரே கோப்பை வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு appeared first on Dinakaran.