×

பும்ரா தங்கமுட்டையிடும் வாத்து… கொன்றுவிடாதீர்கள்! முகமது கைப் அறிவுறுத்தல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தனது எஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிக்கும் முன் பிசிசிஐ ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் பும்ரா விக்கெட்டுகள் எடுப்பதிலும் உடல் தகுதியை பேணி காப்பதிலும் தான் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த வேண்டும். இதில் அணியை வழிநடத்தும் பொறுப்பை பும்ராவுக்கு வழங்கினால் அது நிச்சயம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

முக்கியமான சமயத்தில் கேப்டனாக அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர் கூடுதல் உழைப்பை செலுத்துவதன் மூலம் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பும்ராவின் மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரலாம். எனவே தங்க முட்டை இடும் வாத்தை கொன்றுவிடாதீர்கள் என்று கைப் வலியுறுத்தியுள்ளார்.

The post பும்ரா தங்கமுட்டையிடும் வாத்து… கொன்றுவிடாதீர்கள்! முகமது கைப் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,MOHAMMED ,MUMBAI ,MOHAMMED KAIE ,BCCI ,BUMRA ,Muhammad ,
× RELATED அப்பாடா… பும்ரா பந்து வீசல!: கடவுளுக்கு நன்றி: கவாஜா