×

ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு தகுதி

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ், இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுவல் ரெய்ஸ்-வரேலா ஜோடி 6-3, 3-6, 11-13 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா, இங்கிலாந்தின் ஹென்றி பாட்டன் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

The post ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : ASP Classic Tennis ,Yuki Bambri ,Auckland ,ASP Classic Tennis Series ,Auckland, New Zealand ,India ,France ,Albano Olivetti ,Netherlands ,Sander Arrends ,Yuki Bombri ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…