ஏது இவ்வளவு பணம்? என சோதனை சாவடி போலீசாரிடம் எஸ்பி ஸ்டாலின் கேட்டார். அதைத்தொடர்ந்து எஸ்பி, முறைகேடாக கனிம வளம் ஏற்றி வந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணம் தானே இது? என்று கேட்டு லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார். உடனே தவறு செய்த நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென கடிந்துகொண்ட எஸ்பி ஸ்டாலின் 4 போலீசாரையும் உடனே ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற எஸ்பி ஸ்டாலின், குமாரபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு சென்றார். எஸ்பியை கண்டதும் அங்குள்ள 4 போலீசாரும் குழப்பமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த 4 போலீசாரையும் சற்று தொலைவில் சென்று அமருமாறு எஸ்பி கூறினார். பின்னர் எஸ்பி ஸ்டாலின் சோதனை சாவடி உள்ளே இருக்கையில், தன்னுடன் வந்த போலீசாரை சோதனை சாவடியில் வேலை பார்க்கும் போலீசார் போன்று நடிக்குமாறு உத்தரவிட்டார்.
அப்படியே சென்றபோது, அந்த வழியாக வந்த கனரக வாகன ஓட்டிகள் ஆவணங்களை சமர்ப்பித்து சென்றனர். அப்போது முறைகேடாக ஆவணம் வைத்திருந்த சில கனரக வாகன ஓட்டிகள் போலீசாரிடம் ரூபாய் நோட்டை நீட்டினர். உடனே லாரி டிரைவரை பிடித்த எஸ்பி, உடனே அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். இதை எதிர்பாராத லாரி டிரைவர் அபராதம் கட்டினார். பின்னர் சற்று தொலைவில் இருந்த சோதனை சாவடி போலீசார் 4 பேரை மீண்டும் அருகே அழைத்த எஸ்பி ஸ்டாலின், நீங்கள் தினமும் இப்படித்தான் லஞ்சம் வாங்குறீர்களா? என வார்த்தையால் வெளுத்து வாங்கினார். பின்னர் உங்கள் 4 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றுகிறேன் என அதிரடியாக உத்தரவிட்டுவிட்டு புறப்பட்டு சென்றார்.
The post லாரி டிரைவர்களிடம் லஞ்சம்: சோதனை சாவடி போலீசார் 8 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.