- நொறுக்கி
- கிருஷ்ணகிரி
- ராஜேந்திரன்
- ராஜகொல்லல்லி
- தர்மபுரி மாவட்டம்
- ஜல்லி க்ரஷர் கம்பனி
- பர்கூர்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- தின மலர்
கிருஷ்ணகிரி, ஜன.7: தர்மபுரி மாவட்டம், ராஜகொல்லஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(42). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் ஜல்லி கிரஷர் கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், பணி முடித்து வந்ததும், வழக்கம் போல் வீட்டில் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு, பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி ராணி, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, ராஜேந்திரன் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post கிரஷர் கம்பெனி ஊழியர் திடீர் சாவு appeared first on Dinakaran.