×

சாலை விபத்தில் வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, ஜன.7: கிருஷ்ணகிரி வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(32). இவர், சென்னை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், அரசு ஆடவர் கலைக்கல்லூரி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற அரசு பஸ், திடீரென பிரேக் நின்றதை கண்டு ஹரிதாஸ் திடுக்கிட்டார். உடனே வண்டியை திருப்ப முயன்றும் முடியாததால், பஸ்சின் பின்பகுதியில் டூவீலர் மோதியது. இதில், தடுமாறி கீழே விழுந்து, தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

The post சாலை விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Haridas ,Vellakuttai village ,Government Men's Arts College ,Chennai-Krishnagiri National Highway ,Dinakaran ,
× RELATED கார் மோதி தொழிலாளி பலி