இந்நிலையில், தமிழ்நாட்டில் மகளிர் உதவி தொகையானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கமாக மாதந்தோறும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கலுக்காக 6 நாள்கள் முன்பே வங்கிக் கணக்குகளில் செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மகளிர் உதவி தொகை பெறும் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு ரூ.1000 வழங்காத நிலையில் முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை வந்தது குடும்பத்தலைவிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவுவைப்பு: மகிழ்ச்சியில் பெண்கள்!! appeared first on Dinakaran.