பெங்களூரூ:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நட்சத்திர வீரர்கள் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது விஜய்ஹசாரா டிராபி தொடர் நடந்து வருகிறது. இதில் கே.எல் ராகுலும் கர்நாடக அணிக்காக பரோடா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியா சென்று விளையாடியதால் தனக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக கூறி பி.சி.சி.ஐ அனுமதியோடு விஜய் ஹசாரே தொடரிலிருந்து கே.எல் ராகுல் விலகி இருக்கிறார். மேலும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பதனால் அதற்கு இந்த ஓய்வு தேவைப்படும் என்றும் கூறி விலகி இருக்கிறார். அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மற்ற 2 கர்நாடக வீரர்களான பிரசித் கிருஷ்ணா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் காலிறுதி போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post ஓய்வு கேட்டு விலகிய கே.எல்.ராகுல் appeared first on Dinakaran.