மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் நிதியமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பெற்றவர் மன்மோகன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேது சமுத்திர திட்டங்கள் தமிழகத்திற்கு வர காரணமானவர் மன்மோகன் சிங் என முதல்வர் கூறினார். ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி உறுதியுடன் இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியை உண்மையான காமராஜர் ஆட்சி என வெளிப்படையாக சொன்னவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என முதலமைச்சர் கூறினார்.

The post மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!! appeared first on Dinakaran.

Related Stories: