போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.1000 வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தூரை யாசகர்கள்இல்லாத நகரமாக மாற்ற மத்தியப்பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தூரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாசகர்கள் குறித்து தகவல் தந்தால் ரூ.1000 வெகுமதி தரப்படும் என்ற அறிவிப்புக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
The post மத்தியப்பிரதேசத்தில் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் பரிசு appeared first on Dinakaran.