சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஆம்ஆத்மி கட்சியின் தேசிய இணைச் செயலாளரான கோபால் இத்தாலியா, சூரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திடீரென எழுந்து நின்று தன் பேண்ட்டில் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றி, தன்னைத் தானே 6 முறை அடித்துக் கொண்டார். இதுகுறித்து கோபால் இத்தாலியா கூறுகையில், ‘அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும். குஜாரத்தில் கடந்த காலங்களில் நடந்த மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவம், ஹர்னி கண்டாஸ் தக்ஷஷிலா தீ விபத்து, ராஜ்கோட் விளையாட்டு மண்டல சோகம், தஹோத்-ஜஸ்தான் பலாத்கார வழக்கு போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
இந்த சம்பவங்களில் எத்தனை பேர் இறந்தனர்? மிருகத்தனமாக செயல்படும் ஆளும் பாஜ அரசு மற்றும் அதன் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணரவில்லை. ஒருநாள் குஜராத் மக்களுக்கு நீதி கிடைக்கும். அதனை யாராலும் தடுக்க முடியாது’ என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்ட சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆம்ஆத்மி தலைவர் ஒருவர் குஜராத் பாஜ அரசை கண்டித்து பெல்ட்டால் அடித்துக் கொண்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ‘சவுக்கடி அண்ணாமலை’ போல் பெல்ட்டால் அடித்த ஆம்ஆத்மி தலைவர்: குஜராத் பாஜ அரசுக்கு எதிராக போராட்டம் appeared first on Dinakaran.