இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் அவர்களுக்கு கிடைத்த தகவலை வைத்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களை, பச்சைக்கல் வீராசாமி பி பிளாக்கில் வசித்து வரும் சிலம்பரசன் என்ற நபர் சென்ற வாரம் அழைத்து, இந்த ஏரியாவில் என்ன செய்கிறீர்கள் என மிரட்டி உள்ளார். அவரை பழிவாங்க அவரது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை எரிக்க சிறுவர்கள் திட்டமிட்டு நேற்று அதிகாலை வந்து சிலம்பரசன் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அப்போது அருகில் நிறுத்தப்பட்ட மணிமாறன் மற்றும் டேவிட் சாந்தகுமார் இருசக்கர வாகனமும் எரிந்து நாசமானது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், அதே ஹவுசிங் போர்டில் வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடியான ஹரிஷ் குமார் என்பவரது வீட்டு கதவையும் கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். அப்போதுதான் தங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது. தேவைப்பட்டால் ஹரிஷ் குமார் மீது நிறைய வழக்குகள் உள்ளதால் அவர் மாட்டிக் கொள்வார் என்ற கோணத்தில் இவ்வாறு செய்துள்ளனர். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த 4 சிறுவர்களும் ஆட்டோ எரித்த வழக்கு ஒன்றில் அயனாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அயனாவரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் 3 இருசக்கர வாகனங்கள் எரிப்பு: முன்விரோதத்தில் கொளுத்திய சிறுவர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.