அதற்கான பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்துள்ளது’ என்றார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹமீது இஸ்மாயில், முத்தமிழ் செல்வக்குமார் ஆகியோர், ‘வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்க கோருகிறார்கள். இறுதி விசாரணை தேதியை நிர்ணயிக்க வேண்டும்’ என்றனர்.
இதையடுத்து, நீதிபதிகள், ‘சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? அது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா’? என கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக வழக்குகளை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐகோர்ட் வளாகத்திற்குள் வெடிகுண்டு வந்தது எப்படி? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.