சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான மாநில அரசின் உரிமைகள் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளன என மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தேடுதல் குழுவும் நியமன பொறுப்பும் மாநில ஆளுநரையே சார்ந்தது என்று இந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இது மிகுந்த வேதனைக்குரியது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் காலத்தில் கல்வியில் மாநில உரிமைகளை முற்றாகப் பறிக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை யுஜிசி மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.
The post யுஜிசி விதிகள் திருத்தம்.. மாநில உரிமைகளை பறிக்கின்றது: ஜவாஹிருல்லா கண்டனம்!! appeared first on Dinakaran.