×

டெல்லி- உபி இடையே நமோ பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: உபி மாநிலம் சகிபாபாத்தில் இருந்து மீரட்டுக்கு நமோ பாரத் விரைவு ரயில் சேவை(ஆர்ஆர்டிஎஸ்) ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி -மீரட் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உபி மாநிலம் சகிபாபாத்-டெல்லியில் உள்ள நியூ அசோக் நகர் இடையே 13 கிமீ தூரத்துக்கு ஆர்ஆர்டிஎஸ் திட்ட பணிகள் நடந்து வந்தன. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று ஆர்ஆர்டிஎஸ் புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார். சகிபாபாத்தில் நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த அவர் பயணிகள் மற்றும் சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

4ம் கட்ட மெட்ரோ: டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் 4ம் கட்டமான ஜனக்புரி மேற்கு மற்றும் கிருஷ்ணா பார்க் விரிவாக்கம் இடையிலான புதிய சேவையை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார்.மேலும் ரித்தாலா,நரேலா, குண்ட்லி வழித்தடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார். கிருஷ்ணா பார்க் விரிவாக்க ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் தற்போது டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் உள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளது.

 

The post டெல்லி- உபி இடையே நமோ பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Namo Bharat ,Modi ,New Delhi ,Namo Bharat Express Train Service ,RRTS ,Sakhibabad ,UP ,Meerut ,Delhi-Meerut ,New Ashok Nagar ,Delhi… ,Namo Bharat Train Service ,Delhi ,
× RELATED மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லாததால்...