வேலூர் ஆர்டிஓ உட்பட 30 பேருக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு

வேலூர், ஜன.5: வேலூர் ஆர்டிஓ உட்பட 30 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர்களாக பணியாற்றி வந்த 30 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருமங்கலம் ஆர்டிஓ கண்ணன், சென்னை எழுதுபொருள் மற்றம் அச்சுத்துறை இணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(நிர்வாகம்) விமல்குமார், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்-3 தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், வேலூர் ஆர்டிஓ பாலசுப்ரமணியன், சென்னை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செயலர் மற்றும் பணியாளர் அலுவலராகவும், நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், வேலூர் நெடுஞ்சாலை திட்டங்கள் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 30 பேர் பதவி உயர்வு அளித்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post வேலூர் ஆர்டிஓ உட்பட 30 பேருக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: