வேலூர், டிச.31: புத்தாண்டையொட்டி அமிர்தி வன உயிரியல் பூங்கா இன்று வழக்கம் போல் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் ஞாயிறு உள்பட மற்ற அனைத்து நாட்களும் பூங்கா திறந்திருக்கும். இந்நிலையில் நாளை புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை என்பதால், இன்று (செவ்வாய்க்கிழமை) பூங்கா வழக்கம் போல செயல்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post அமிர்தி வன உயிரியல் இன்று திறப்பு அதிகாரிகள் தகவல் புத்தாண்டையொட்டி appeared first on Dinakaran.