மருத்துவ பணியிடங்களுக்கு 53 பேர் விண்ணப்பம் டிஆர்ஓ தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர் வேலூர் மாவட்டத்தில் நலவாழ்வு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில்

வேலூர், ஜன.3: வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலி பணியிடங்களுக்கு 53 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் டிஆர்ஓ தலைமையில் குழுவினர் நேற்று நடத்தினர். பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், மருத்துவ அலுவலர், மருந்து வழங்குநர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட காலியிடம் சித்த ஆலோசகர், சிகிச்சை உதவியாளர், அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பல் தொழில்நுட்ப வல்லுநர், இயன் முறை மருத்துவர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணிநியமனம் செய்ய தேசிய நலகுழும இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த மாதம் 16ம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி தலைமையிலான அரசு மருத்துவமனைக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோகினி தேவி, மருத்துவபணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணி, மாவட்ட சித்தா அலுவலர் பழனி அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். இதில் காலி பணியிடங்களுக்கு மொத்தம் 53 பேர் விண்ணப்பித்து நேற்றைய நேர்காணலில் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு விரைவில் கலெக்டர் சுப்புலட்சுமி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மருத்துவ பணியிடங்களுக்கு 53 பேர் விண்ணப்பம் டிஆர்ஓ தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர் வேலூர் மாவட்டத்தில் நலவாழ்வு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் appeared first on Dinakaran.

Related Stories: