ஒரு நாள் வேட்டையாடித் திரும்பும்போது ப்ரௌனுக்குப் பகீரென்றது. அவன் பாடுபட்டுக் கட்டியிருந்த குடிசை தீப்பற்றி எரிந்தது. அவன் ஒரு குழந்தையைப் போலக் கதறி அழுதான். ஐயா, எனது ஆதாரமே போய்விட்டதே, இனி நான் என்ன செய்வது? கடவுள் என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தானே ஒவ்வொரு நாளும் ஜெபித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடவுள் இப்படியொரு சோதனையை அனுமதித்து விட்டாரே என ஒரு மரத்தில் ஏறி வானத்தை பார்த்து புலம்பினான். என்ன ஆச்சரியம்! உயிர்மீட்சிப் படகு ஒன்று தீவை நோக்கி வந்து கொண்டிருந்தது.ப்ரௌன் தாடியும் மீசையும் வளர்ந்து ஒரு கரடிபோல் காட்சி அளித்தான். தன்னை மீட்க வந்தவர்களிடம் ‘‘கர்த்தர்தான் உங்களை அனுப்பினார்’’ என்று கூறி கதறி அழுதான். அங்கு வந்த நான்கு மாலுமிகளும், ‘‘நீ இவ்வளவு பெரிய நெருப்பை கொளுத்தியிராவிட்டால் உன்னை நாங்கள் கண்டுபிடித்திருக்கவே முடியாது. நெருப்பைக் கண்டவுடன்தான் இங்கு மனிதர் இருக்கவேண்டும் என்று எண்ணி வந்தோம் வா போகலாம்’’ என்றனர்.
குடிசை எரிந்து போனதற்காக மதியீனமாக அழுது புலம்பி கடவுளின் வல்லமையையும் குறைத்து மதிப்பீடு செய்துவிட்டேனே என மனம் வருந்தினான். பின்னர் தன்னை காப்பாற்றிய தேவனுக்கு நன்றி கூறி உயிர்மீட்சிப் படகில் ஏறினான்.இறைமக்களே, ‘‘அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’’ (ரோமர் 8:28) என இறைவேதம் கூறுகிறது. தேவன் தமது பிள்ளைகளுக்கு நன்மையை மட்டுமே அனுமதிக்கிறவர். சில தருணங்களில் நமது பார்வைக்கு தீமை போல காட்சியளிப்பதும், நன்மைக்காகதான் என்பதை காலம் நமக்கு உணர்த்தும். நம்முடைய பார்வையில் நன்மையாக தோன்றுவது அல்ல, நம்மை உண்டாக்கிய தேவனுடைய பார்வையில் எது நன்மையானதாக தோன்றுகிறதோ, அதுவே நிரந்தரமான மற்றும் மகிழ்ச்சியளிக்கும் நன்மையாகும். ஆகவே தீமைகளும் நன்மையாக்கும் தேவன் இந்த புதிய ஆண்டு முழுவதும் உங்களுடன் இருந்து உங்களை நம்மையின் பாதையில் வழிநடத்துவாராக.
அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.
The post புத்தாண்டில் தேவன் காட்டும் நன்மையின் பாதை appeared first on Dinakaran.