- of
- ரெங்கநாதர் கோயில்
- நாமக்கல்
- இறைவன்
- ரங்கநாத சுவாமி
- திருவரங்கம்
- வைகுண்ட ஏகாதசி விழா
- சொர்க்கத்தின் வாசல்
நாமக்கல், ஜன.4: நாமக்கல்லின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில், ரங்கநாத சுவாமி சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருவரங்கத்துக்கு இணையாக கருதப்படும் இக்கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வோர் ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, வரும் 10ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவையொட்டி பக்தர்கள் நெரிசலின்றி சுவாமியை தரிசிக்க ஏதுவாக, கோயில் படிக்கட்டுகளில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கட்டளைதாரர்கள் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் தயார் செய்து, பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, உதவி ஆணையர் இளையராஜா ஆகியோர் செய்துள்ளனர்.
The post ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.