- ஸ்டீல் அமைப்பு
- வனதி சினிவாசன்
- சட்டமன்ற உறுப்பினர்
- புதுச்சேரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜா மகளிர் அணி
- புதுச்சேரி பஜாஜ்
- வந்தி சினிவாசன்
- பஜாஜ் தொகுதி தேர்தல் கருத்துறை
- தின மலர்
புதுச்சேரி, ஜன. 4: புதுச்சேரியில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் பாஜ அமைப்பு தேர்தல் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. புதுச்சேரி பாஜவில் அமைப்பு தேர்தலை நடத்தி மாவட்ட, தொகுதி அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜ மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி நேற்று நகரம், உழவர்கரை, அரியாங்குப்பம், வில்லியனூர் மாவட்ட தலைவர்கள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில தேர்தல் பார்வையாளர் அருள், பாஜ மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணன்குமார் ஆகியோருடன் முன்னதாக வானதி சீனிவாசன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாநில, மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. பாஜ அமைப்பு தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் 15ம் தேதிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தில் நாளை (இன்று) தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்தார். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நிவாரண தொகையும் வழங்கவில்லை என கேட்டபோது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினார்.
The post வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் பாஜ அமைப்பு தேர்தல் கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.