×

விபிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்க விழா

வடலூர், ஜன. 5: வடலூர் வள்ளலார் பிரிமியர் லீக் கிரிக்கெட் சார்பில், கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐபிஎல் போட்டி போன்று நடத்த திட்டமிட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏலத்தின் இறுதியில் 10 கிரிக்கெட் அணிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 160 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வடலூர், குறிஞ்சிப்பாடி நெய்வேலி ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்க உள்ளது. கிரிக்கெட் போட்டி தொடரின் தொடக்க விழா நேற்று நடந்தது. வள்ளலார் கிரிக்கெட் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் வரவேற்றார். குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர், கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து, கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து முதலுதவி மருத்துவ பெட்டியை வழங்கி பேசினார்.

வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், டாக்டர் பிரியதர்ஷன், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரர் சிலம்பரசன், மெரிட்டல் ஓட்டல் உரிமையாளர் ரங்கராஜன், சமூக ஆர்வலர் பெலிக்ஸ், எஸ்டி ஈடன் பள்ளியின் நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ், டிஆர்பி கன்ஸ்ட்ரக்சன் இளங்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, ரேவந்த் கார்த்திக், ராமச்சந்திரன், வில்லியம், லியோ பிராங்க்ளின், ராகவன், வீரமுத்து, பெருமாள், சந்துரு மற்றும் வேல்மணி செய்திருந்தனர். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

The post விபிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : VPL Cricket Series Opening Ceremony ,Vadalur ,Vadalur Vallalar ,Premier League Cricket ,IPL ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசுத் தொகுப்பு கரும்புகள்...