உளுந்தூர்பேட்டை, ஜன. 1: உளுந்தூர்பேட்டை பகுதியில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பல வண்ணங்களில் கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் புத்தாண்டை கொண்டாட இளைஞர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை நகர பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பேக்கரிகள் மற்றும் கேக் ஷாப் தயாரிப்பு கடைகளில் அதிக அளவில் புத்தாண்டு கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆர்டருக்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.2000 வரையில் வண்ண, வண்ண நிறங்களில் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கேக்குகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை நேற்று உளுந்தூர்பேட்டை பகுதியில் இளைஞர்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
The post உளுந்தூர்பேட்டை பகுதியில் புத்தாண்டை கொண்டாட பல வண்ணங்களில் தயாரான கேக்குகள் appeared first on Dinakaran.