மகாராஷ்டிராவில் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தபின் உயிர் பிழைத்த நபர்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தபின், உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது ஸ்பீட் பிரேக்கரில் ஏறியிறங்கிய அதிர்வில் பாண்டுரங்கன் (65) என்பவர் உயிர்த்தெழுந்துள்ளர். இச்சம்பவத்தை அறிந்து இன்ப அதிர்ச்சியில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தன்னுடைய விவசாய நிலத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் உல்பே. அப்போது அவருக்கு கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. அத்துடன் உடல்நிலை மிகவும் சோர்வுற்று அவரால் நிலையாக நிற்க முடியவில்லை. உடனடியாக காஸ்பா பவ்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

உல்பே-வை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். அத்துடன், உடனடியாக மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தியிருக்கார். அந்த மருத்துவமனையில் இருக்கும்போதும் அவர் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தார். அங்கு அவருக்கு இசிஜி-ம் எடுக்கப்பட்டது. இருந்தும் அவர் இறந்துவிட்டார்” என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் செலுத்த வேண்டிய தொகை எல்லாவற்றையும் செலுத்திவிட்டு மருத்துவமனையில் இருந்து உடலை அடக்கம் செய்யும் முடிவுடன் அங்கிருந்து கிளம்பினார்கள் உல்பேவின் குடும்பத்தினர்.பின்னர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை வீட்டிற்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது செல்லும் வழியில் திடீரென ஆம்புலன்ஸ் டிரைவர் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கிய போது வாகனம் குலுங்கியது. அப்போது அவரது கை லேசாக அசைந்துள்ளது. உறவினர்கள் அவரை தொட்டு பார்த்தபோது உயிர்நாடி இருப்பதை உணர முடிந்திருக்கிறது. உடனடியாக வாகனத்தை மருத்துவமனைக்கு திருப்பி இருக்கிறார்கள். பின்பு வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து உயிர்பிழைக்க வைத்தனர்.

The post மகாராஷ்டிராவில் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தபின் உயிர் பிழைத்த நபர் appeared first on Dinakaran.

Related Stories: