எமர்ஜென்சி படத்தை காண பிரியங்கா காந்திக்கு கங்கனா அழைப்பு

புதுடெல்லி: எமர்ஜென்சி படத்தை காண பிரியங்கா காந்தியை அழைத்ததாக நடிகை கங்கனா தெரிவித்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி குறித்த எமர்ஜென்சி படத்தை நடிகையும், பா.ஜ எம்பியுமான கங்கனா ரனாவத் தயாரித்து நடித்துள்ளார். பல தடைகளுக்கு பிறகு இந்த மாதம் 17ம் தேதி படம் வெளிவர உள்ளது. இந்த படம் குறித்து நடிகை கங்கனா கூறுகையில்,’ எமர்ஜென்சி திரைப்படத்தைக் காண காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்திக்கு நான் அழைப்பு விடுத்தேன். நாடாளுமன்றத்தில் நான் பிரியங்காவை சந்தித்தேன். அப்போது முதலில் நான் அவரிடம் சொன்னது, நீங்கள் ‘எமர்ஜென்சி’ படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் மிகவும் கனிவுடன் ‘நிச்சயம், பார்க்கலாம்’ என்றார். மீண்டும் நான் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்கும் என்று கூறினேன்.

இந்திரா காந்தியை திரையில் கண்ணியமாக சித்தரிப்பதில் நான் அதிக கவனத்துடன் இருந்தேன். ஏனெனில் இந்திரா காந்தியும் மிகவும் விரும்பப்படும் தலைவர். எமர்ஜென்சியின் போது நடந்த சில விஷயங்கள் தவிர, அவர் மிகவும் நேசிக்கப்பட்டார். மக்களால் மிகவும் கொண்டாடப்பட்டார் என்று நான் நினைக்கிறேன். மூன்று முறை பிரதமராக இருப்பது சாதாரணம் அல்ல’ என்றார்.

The post எமர்ஜென்சி படத்தை காண பிரியங்கா காந்திக்கு கங்கனா அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: