மகாராஷ்டிராவில் பரபரப்பு; 7 நாளில் ‘சொட்டைத்தலையான’ 3 கிராம மக்கள்: முடி கொட்டுவதை நிறுத்த முடியாமல் திணறல்

புல்தானா: மகாராஷ்டிராவில் ஒரே வாரத்தில் 3 கிராம மக்கள் வழுக்கை தலையானதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷேகான் தாலுகா உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா என்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் திடீரென பெருமளவு முடி கொட்டி பலர் வழுக்கை தலைக்குமாறினார்கள். ஆண், பெண் என்று இல்லாமல் அனைத்து தரப்பினரும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் கிராமங்களில் பெரும் பீதி ஏற்பட்டது. இறுதியில் ஆய்வுக்கு வந்த சுகாதார அதிகாரிகள், உரங்களால் ஏற்படும் நீர் மாசுதான் பெருமளவில் முடி உதிர்தலுக்கு காரணம் என்று சந்தேகம் ெதரிவித்துள்ளனர். மேலும் கிராமங்களில் உள்ள தண்ணீரின் மாதிரிகள் மற்றும் கிராம மக்களின் தலைமுடி மற்றும் தோல் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.

The post மகாராஷ்டிராவில் பரபரப்பு; 7 நாளில் ‘சொட்டைத்தலையான’ 3 கிராம மக்கள்: முடி கொட்டுவதை நிறுத்த முடியாமல் திணறல் appeared first on Dinakaran.

Related Stories: