கணவனின் இந்நிலைக்கு காரணமான பார்வதி தேவி ‘‘அழகிழந்து முதுமை தோன்றத்துடன் கொக்கு இறகை தலையில் வைத்து கந்தலாடை உடுத்தி அலைவாயாக’’ என சரஸ்வதி தேவி சாபமிட்டாள். சிவபெருமானும் – பார்வதி தேவியும் எங்கெங்கோ அலைந்து திரிந்தனர். இறுதியாக பார்வதி திருவண்ணாமலை தஞ்சம் அடைந்தார். அங்குள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தவுடன் முதுமை மறைந்து பழைய உருவம் வந்தது. பின்பு அங்கிருந்து கிழக்கு நோக்கி மேல்மலையனுரை அடைகிறார், பார்வதி தேவி. அப்பொழுது மலையரசன் பட்டியாக இருந்தது என தலபுராணம் கூறுகிறது. அங்குள்ள பூங்காவனத்தில் புற்றுரூபமாய் பார்வதி வீற்றிருக்கிறார். அதற்கு காவலாக அந்த ஊர் மக்கள் இருந்துள்ளார்கள். திடீரென உருவான புற்றுக்கு மஞ்சள், குங்குமம் சாற்றி புடவை சாற்றி வழிபடத் தொடங்கினர். இதைக் கண்ட மன்னன் மலையரசன், புற்றை இடிக்க உத்தரவிடுகிறான். ஊர் மக்கள் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. இடிப்பதற்கு ஓங்கியவுடன், ஊர் மக்களை தவிர, மற்றவர்கள் அதாவது மன்னரின் படைகளை பார்வதிதேவி மறைத்துவிட்டாள்.
தன் தவறை உணர்ந்த அரசன், புற்றிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான். அப்பொழுது, சிவபெருமான், “பெற்ற சாபத்தை தீர்க்கவே தவம் செய்ய வந்திருக்கிறேன். என்னை வேண்டி வணங்கினால் வரங்களை அளிப்பேன்’’ என பார்வதி தேவி ஆசி வழங்கி மறைந்தாள். இங்கு மஹாவிஷ்ணு புற்றாக இருக்கிறார். சிவபெருமானும் அலைந்து திரிந்து மேல்மலையனூர் வந்து சேருகிறார். பார்வதி தேவி, சிவபெருமானின் சாபம் தீர ஆலோசிக்கிறார். நவதானியங்களை சமைத்து மூன்று லிங்கமாக பிடித்து சிவனை சுடுகாட்டில் தங்க வைத்து இரண்டு உருண்டைகளும் பிரம்மன் தலைக்கு கொடுத்து பிரம்மன் அதை சாப்பிட்டவுடன் மூன்றாவது உருண்டையை தலை கொடுப்பது போல் கீழே போட்டு விடவும். நவதானிய உணவின் சுவையை சுவைக்க பிரம்மாவின் தலை கீழே இறங்கும் அப்பொழுது நீ உக்ர அவதாரம் எடுத்து வலது காலால் தலையை நசுக்கி அழித்துவிடுங்கள் என மஹாவிஷ்ணு ஆலோசனை சொல்கிறார்.
அதன்படியே, இவ்வாறு பார்வதி தேவி செய்து, சிவனின் பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கினார். உக்ர அவதாரம் கொண்டதால், அங்காளம்மன் எனப் பெயர் பெற்றாள். ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கிரக நாமமாக செவ்வாய் – சூரியன் – சனி இணைவு ஏற்படுகிறது.இத்தலத்தில், கல்யாண வரம் வேண்டுவோர், நவதானியத்தை முலைப்பாரி விட்டு வந்தால், கல்யாணம் சீக்கிரம் கூடி வரும். இக்கோயிலில் நவதானிய மாவில் நெய் விளக்கு ஏற்றி வந்தால், பெரிய பிரச்னையாக இருந்தாலும் விரைவில் தீர்வாகும். புற்றுநோய் பாதிப்பில் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு நவதானிய மாவில் வெல்லம் கலந்து மூன்று லிங்கம் பிடித்து மீன்களுக்கு உணவாக கொடுத்தால், புற்றுநோய் குணமாகும் வாய்ப்புகள் உருவாகும். வம்பு வழக்கு உள்ளவர்கள், அமாவாசை அன்று இரவு தங்கி நவதானிய மாவில் வெல்லம் கலந்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்து, மீன்களுக்கு உணவாக கொடுத்தால், வழக்குகள் தீர்விற்கு வரும்.
The post சிவனுக்கு தோஷம் போக்கிய மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி appeared first on Dinakaran.