×

ரோகிணி

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…

வான்வெளியில் மண்டலத்தில் நட்சத்திர வரிசையில் நான்காவதாக வரும் நட்சத்திரம் ரோகிணி. இது ஒரு முழு நட்சத்திரம். இந்த நட்சத்திரம் இருக்கக்கூடிய ராசி சுக்ரனின் அம்சம் கொண்ட ரிஷப ராசி என்பதை நினைவில் வைத்துக் கொள்க. ஆகவே, அழகிய நட்சத்திரம் ஒன்று உண்டு என்றால், அது நிச்சயம் ரோகிணி. ரோகிணி என்ற சொல்லுக்கு சக்கரம் என்றும் சகடம் என்ற பொருளுண்டு. இந்த நட்சத்திரம் வானில் சிவப்பு வண்ணத்தில் காணப்படும்.மிகவும் ரம்மியமான நட்சத்திரமாக இருப்பதால்தான் சந்திரன் இந்த நட்சத்திரத்தில் உச்சம் பெறுகிறார். கிருஷ்ண பரமாத்மா பிறந்த நட்சத்திரம் ரோகிணிதான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்ற கருத்துண்டு. அது முற்றிலும்உண்மை இல்லை. சமூகத்தில் கம்சனை போல் யாரும் இல்லை. கம்சனுக்கு நிகழ்ந்த நிகழ்வை மனதில் கொண்டு நம்புகிறார்கள். இனி ரோகிணி நட்சத்திரம் பற்றி விரிவாகக் காண்போம்.இது முழு நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்கு முன்னால் சூரியனின் நட்சத்திரம் பின்னால் செவ்வாயின் நட்சத்திரமும் இருப்பதால் இது அதிக ஒளியுடன் காணப்படலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சர்ப தோஷம் இல்லை எனலாம். காரணம் இந்த நட்சத்திரத்தில்தான் சாயா கிரகமான ராகு நீச்சம் பெறுகிறார்.ரோகிணி நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் தேருருள், அயன்நாள், வையம், சகடு என்று அழைக்கப்படுகிறது.

ரோகிணி – விருட்சம் : நாவல் மரம்.
ரோகிணி – யோனி : ஆண் நாகம்.
ரோகிணி – பட்சி : மயில்.
ரோகிணி – மலர் : பாரிஜாதம்.
ரோகிணி – சின்னம் : தேர்.
ரோகிணி அதிபதி : பிரம்மா.

ரோகிணி நட்சத்திர அதிபதியாக பிரம்மா வருவது சிறப்பாகும். இந்த நட்சத்திரமானது மிகவும் நுட்பமான ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமாக இருக்கிறது. கலைகளுக்கு காரணமான ரிஷப ராசியில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். ரோகிணி நட்சத்திரம் என்றவுடன் வாழ்வு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் கொடுத்த கிருஷ்ண பகவானின் அவதாரம் நம் நினைவிற்கு வரும். மேலும், இந்த நட்சத்திர சின்னத்திற்கு தகுந்தாற் போல் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து, எப்பொழுதும் தன் வெற்றியை உறுதி செய்து கொண்டே இருந்தார். ரோகிணி நட்சத்திரம் சூரியனைவிட 36 மடங்கு பெரிய அமைப்பாக இருக்கும். நட்சத்திரங்களில் அதிகமாக ஒளிரும் தன்மை கொண்ட நட்சத்திரம் ரோகிணி ஆகும்.

பொதுப்பலன்கள்

ரோகிணி நட்சத்திரக் காரர்கள் தன்னை எப்பொழுதும் அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதுமட்டுமின்றி இவர்களுக்கு கலைகளின் மீது நாட்டம் இருக்கும். கலைகளை கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமிருக்கும். ரோகிணி, சந்திரனின் உச்சம் நட்சத்திரமாக இருப்பதால் சின்னச்சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு கோபப்படும் குணமுடையவர்களாக இருப்பர். இக் காரணத்தினால், சில நேரங்களில் சுற்றத்தையும் நட்பையும் இழக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுவர். அதே சமயத்தில் சகிப்புதன்மை இவர்களுக்கு அதிகம் என்பதால் ஒருவர் மீது அதீத அன்பு வைத்திருப்பவர் அவர்களின் எல்லாச் செயல்களையும் பொறுத்துக் குணமுடையவர்கள்.

இவர்கள் எந்த உத்யோகம் அல்லது தொழில் செய்தாலும் அர்பணிப்புடன் இருக்கும். குடும்பத்திற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் இவர்கள் என்பது உறுதி.சந்திரனின் சாரமான நட்சத்திரம் மட்டுமின்றி சந்திரனின் உச்சம் பெறும் இடமாக இருப்பதால் உணவை சுவைப்பதிலும் சுவையான உணவை சமைப்பதிலும் ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் மறக்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகமாக நீர் தொடர்பான பானங்களை அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருப்பர். நீர்நிலைகளில் அதிக நேரம் குளிக்கும் விருப்பம் கொண்டவர்கள். ஆயிரம் பிரச்னைகள் காரணங்கள் இருந்தாலும் எப்படியோ வெற்றியை ேநாக்கிய பயணிக்க வேண்டும் என்ற கவனத்துடன் இருப்பார்கள்.இந்த நட்சத்திரம் கொண்டவர்கள் கிருஷ்ணன் என்ற நபருடன் தொடர்பில் இருப்பார்கள். காரணம் இந்த ரிஷப ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதி புதனாக இருப்பதாலும் புதன் அந்த வீட்டில் உச்சம் ெபறுவதாலும் நிச்சயம் அந்த பெயர் தொடர்புடன் இருக்கும். ஜோதிடத்தில் நம்பிக்கையும் விரைவாக பலன் கிடைக்க வில்லை எனில் அவநம்பிக்கையும் இவர்களுக்கு உண்டு.

தொழில்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள். மேலும், இவர்களை போன்று சிறப்பாக தொழிலை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுப்பும் அளவிற்கு செய்ய வல்லவர்கள்.

ரோகிணியின் வேதை நட்சத்திரம்

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். சுவாதி நட்சத்திர நாளில் கவனமாக இருப்பதும். சுவாதி நட்சத்திர நபர்களுடன் கவனமாக இருப்பதும் அவசியமாகும்.

ரோகிணியின் வெற்றி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்திற்கு மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், ரேவதி மற்றும் உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வெற்றி தரும் அமைப்பாகும்.

ஆரோக்கியம்

இந்த நட்சத்திரத்திற்கு சந்திரன் வலிமை அடைவதால் அடிக்கடி இவர்களுக்கு சளி தொந்தரவுகளும் பெண்களுக்கு காலில் சேற்றுபுண் என்று சொல்லக்கூடிய நீர் தங்கி கால்களில் ஏற்படும் தொற்றுகள் உண்டாகும்.

ரோகிணி நட்சத்திர பரிகாரம்

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற இடத்தில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. இக்கோயிலில் வியாழக்கிழமை சென்று உங்கள் ஜாதகத்தை வைத்து வழிபட்டு வந்தால், உங்களின் தலைவிதி மாறும் என்பது நிச்சயம். உங்களின்

தோஷங்கள் விலகும்.

சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கும், வியாழ பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு முதியவர் களுக்கும் ஊனமுற்றவர் களுக்கும் அன்னதானம் செய்யுங்கள். உங்களின் தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். வருடத்திற்கு ஒரு முறை திங்கள்கிழமை அன்று திருப்பதி சென்று வாருங்கள். நன்மைகள் பல உண்டாகும்.

The post ரோகிணி appeared first on Dinakaran.

Tags : Rokini ,Rishaba ,Sukran ,
× RELATED இந்த வார விசேஷங்கள்