- Palaniswami
- அமைச்சர்
- ரகுபதி
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- தமிழ்நாடு காவல்துறை
- அண்ணா பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதை மக்கள் அறிவர். உயர் நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனாலும் தினமும் விடிந்து எழுந்தவுடன் தனது அரசியல் ஆதாயத்திற்காக, அரைத்து அரைத்து புளித்த அதே பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. இன்று உயர் நீதிமன்றமே எதிர்கட்சிகளின் செயலை தாங்கமுடியாமல் அவர்கள் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது. ‘எதிர்க்கட்சிகள் வெறும் விளம்பர நோக்கில் இந்த விவகாரத்தை அணுகுவதாக கூறி’ கடுமையாக கண்டித்துள்ளது. அடிமை அதிமுக என்ற கட்சி இனி எடப்பாடி கையில் இருக்குமோ. இருக்காதோ. என்ற வகையில், ‘காற்றில் கிழிந்து காணாமல் போக காத்திருக்கும் சின்னம்’ தொடர்பான வழக்கு நடந்து வருவதால் அதைத் திசை திருப்ப உயர்நீதிமன்றமே கண்டித்த பின்னும் அரசியல் சுயநலத்திற்காக பாதிக்கபட்ட மாணவியின் எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலையின்றி நடந்துவருகிறார் பழனிசாமி.
தனது கட்டுப்பாட்டில் இருந்து அதிமுக கைநழுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிக்கும் மட்டமான அரசியலை செய்து வருகிறார். என்சிஆர்பி தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது. அதில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராய் வீண் வதந்தி பரப்பி அச்சுறுத்த நினைக்கும் பொய்ச்சாமிகளை மக்களே புறந்தள்ளுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அரசை குறைகூற காரணங்கள் இன்றி ஒரே பொய்யை அரைத்து, அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் appeared first on Dinakaran.