- நித்யஸ்ரீ
- துளசிமதி
- மனிஷா
- ரத்னா
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேல் ரத்னா
- மத்திய விளையாட்டு அமைச்சகம்
- தின மலர்
புதுடெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீராங்கனைகள் நித்யஸ்ரீ, துளசிமதி, மனிஷா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கும், சதுரங்க வீரர் குகேஷ் கேல் ரத்னா விருதுக்கும் தேர்வாகி உள்ளனர். விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்யும். அப்படி செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்குவார்.
இந்த ஆண்டு இளம் வயதில் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டு வீரர் தொம்மராஜூ குகேஷ், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2பதக்கங்களை வென்ற முதல் இந்தியரான மனு பாக்கர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாாிஸ், டோக்கியோ பாரா ஒலம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருதுக்கு முதலில் மனு பாக்கர் பெயர் பரிந்துரை செய்யாதது சில நாட்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையானது. இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது, பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன்(காஞ்சிபுரம்), நித்யஸ்ரீ சுமதி சிவன்(கரூர்), மனிஷா ராமதாஸ்(திருவள்ளூர்) உட்பட 34 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் பிரிவில் துளசிமதி வெள்ளிப்பதக்கமும், நித்யஸ்ரீ ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3பிரிவுகளில் 3வெண்கலமும், மனிஷா ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் வென்று அசத்தினர். நித்யஸ்ரீ இப்போது லக்னோவில் வசித்து வருகிறார்.
கூடவே பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்காக கேரளாவைச் சேர்ந்த எஸ்.முரளிதரன் உட்பட 5 பேர் தேர்வாகி இருக்கின்றனர். கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா விருதுகளுக்கு தேர்வான இவர்களுக்கு, இம்மாதம் 17ம் தேதி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.
The post அர்ஜூனா விருதுக்கு நித்யஸ்ரீ, துளசிமதி, மனிஷா தேர்வு: குகேசுக்கு கேல் ரத்னா appeared first on Dinakaran.