- ஆஸ்திரேலியா
- பார்டர்-கவாசாகி டெஸ்ட்
- சிட்னி
- பார்டர்-கவாசாகி கோப்பை
- பார்டர்-கவாசாகி டெஸ்ட் தொடர்
- தின மலர்
ஆஸ்திரேலியா: சிட்னியில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. 162 ரன் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து வெற்றிபெற்றது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் – காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் நவ. 22-ல் தொடங்கியது. கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படும் தொடராக பாா்டர் – காவஸ்கர் கோப்பை (பிஜிடி) உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா சந்தித்தது.
முன்னதாக, 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில், சிட்னியில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் பாா்டர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பார்டர் – கவாஸ்கர் தொடரை வென்றதன்மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தெனாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி appeared first on Dinakaran.