- விஜய் ஹசாரே டிராபி தமிழ்நாடு
- மிசோரம்
- வருண்
- விஜயனகரம்
- தமிழ்
- தமிழ்நாடு
- விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி
- பாபி ஜோதன்சங்கா
- தமிழ்நாடு…
- தின மலர்
விஜயநகரம்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 6வது சுற்றில் டி பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு-மிசோரம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பாபி ஜோதன்சங்கா தலைமையிலான மிசோரம் 21.2 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன் எடுத்தது. தமிழ்நாடு வீரர்கள் வருண் சக்ரவர்த்தியின் அற்புத சுழல் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. விஜய் சங்கர், சந்தீப் வாரியர் தலா 2, முகமது அலி ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
தொடர்ந்து 50 ஓவரில் 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு தனது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான துணை கேப்டன் நாரயண் ஜெகதீசன் 46, துஷார் ரஹேஜா 27 ரன் குவித்தனர். அதனால் தமிழ்நாடு விக்கெட் இழப்பின்றி 10 ஓவரில் 75 ரன் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி, 4 ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளுடன் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டத்தில் நாளை சத்தீஸ்கருடன் மோத உள்ளது.
The post விஜய் ஹசாரே கோப்பை தமிழ்நாடு வெற்றி: வருண் சுழலில் சிக்கிய மிசோரம் appeared first on Dinakaran.