×

பிரிஸ்பேன் டென்னிஸ் அரையிறுதியில் ஆண்ட்ரீவா

*பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா(17வயது, 16வது ரேங்க்), நட்சத்திர வீராங்கனை ஆன்ஸ் ஜெபர்(30வயது, 42வது ரேங்க்) உடன் மோதினார். அதில் ஒரு மணி 29 நிமிடங்களில் மிரா 6-4, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் உக்ரைன் வீராங்கனை அன்ஹ்லினா கலினினா (27வயது, 55வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை பாலினா குதெர்மேடோவா (21வயது, 106வது ரேங்க்)ஆகியோரும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

* நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடக்கும் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் விளையாட ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (27வயது, 57வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை ராபின் மோன்கோமேரி (20வயது, 117வது ரேங்க்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

The post பிரிஸ்பேன் டென்னிஸ் அரையிறுதியில் ஆண்ட்ரீவா appeared first on Dinakaran.

Tags : Andreeva ,Brisbane Tennis Semifinals ,Brisbane International Tennis Tournament ,Mira Andreeva ,Ans Jefer ,Dinakaran ,
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: சபலென்கா...