×

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு: 10,000 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 31ம் தேதி, மேட்டூர் அணை ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியது. இதனால், நேற்று முன்தினம், நீர்திறப்பு விநாடிக்கு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தணிந்ததால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மாலை பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 5000 கனஅடியாகவும் இரவு 8 மணியளவில் 10,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1871 கனஅடியாக இருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு: 10,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Cauvery Delta ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் சதாசிவம் எம்எல்ஏ ஆய்வு