×

பல்லாவரம் அருகே தனியார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: தொழிலாளர்கள் உயிர் தப்பினர்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், தேவராஜ் பிரதான சாலையில் இளமதி என்பவருக்கு சொந்தமான மெட்டல் வாஷர் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது, கம்பெனியின் ஒரு அறையில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறிது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மூலப்பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பல்லாவரம் அருகே தனியார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: தொழிலாளர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Ballavaram ,Yalamati ,Anakaputtur, Devaraj ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் அருகே உள்ள கடைகளில் போலீஸ்...