×

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் பயங்கரம்; தவாக நிர்வாகி குத்திக் கொலை: பழ வியாபாரிக்கு போலீஸ் வலை

கடலூர்: கடலூர் முதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியை கொலை செய்த பழ வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(34). விவசாயியான இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியாக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சங்கர் வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர். இதைப்பார்த்த சங்கரின் நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓட முயன்ற சங்கரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து கத்தியால் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் வழக்குபதிந்து, விசாரித்தனர்.

இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் தரப்பினருக்கும், சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த பழ வியாபாரி சதீஷ் தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து சிலரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த சங்கர் சில நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதை நோட்டமிட்ட சதீஷ் தரப்பினர் அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார், சதீஷ் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சதீஷ் வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகியுள்ளது. வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளையும் தீ வைத்து எரித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர்.

The post கடலூர் முதுநகரில் நள்ளிரவில் பயங்கரம்; தவாக நிர்வாகி குத்திக் கொலை: பழ வியாபாரிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Life Party ,Sankar ,Cuddalore Municipal Sanctuary Camp ,Tamil ,Tada ,
× RELATED கடலூர் முதுநகரில் நள்ளிரவில் தவாக...