×

புத்தாண்டு போதையில் மட்டையான சுற்றுலாப்பயணிகளிடம் 60 பவுன் நகை அபேஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். முன்னதாக புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் இருந்த 6 ஆயிரம் அறைகளும் நிரம்பிவிட்டது. இதனால் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா வந்தவர்கள் திண்டாடினர்.

31ம் தேதி இரவு விடுதிகளில் தங்க இடம் கிடைக்காதவர்கள் ரயில் நிலையம், பஸ் நிலையம், பார்க்கிங் இடங்கள், பிளாட்பார்ம், தங்கள் வந்த கார்களில் படுத்துறங்கினர். பலர் சாலையோரம் கடும் குளிரிலும் தூங்கியதை காணமுடிந்தது. மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து மட்டையாகி கிடந்த பலரிடம் செயின், விலை உயர்ந்த போன், கைக்கடிகாரம், பர்ஸ் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். போதை தெளிந்ததும், பொருட்களை பறிகொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நகரப்பகுதியில் உள்ள 2 காவல்நிலையங்களில் பல புகார்கள் பதிவாகி வருகிறது. இதுவரை 60 பவுன் நகைகள், 10க்கும் மேற்பட்ட மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை திருடியதாக புகார் அளித்துள்ளனர். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது சிலர் திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதை வைத்து 10 பவுன் நகைகள்,ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

The post புத்தாண்டு போதையில் மட்டையான சுற்றுலாப்பயணிகளிடம் 60 பவுன் நகை அபேஸ் appeared first on Dinakaran.

Tags : New Year's Eve ,Puducherry ,New Year ,
× RELATED கடற்கரையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்