- மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- அமுதா ஜான் கென்னடி ரோஸ் மேரி
- மாஞ்சோலை
- திருநெல்வேலி மாவட்டம்
- புதிய தமிழரசுக் கட்சி
- கிருஷ்ணசாமி
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
புதுடெல்லி: மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியை சேர்ந்த அமுதா ஜான் கென்னடி ரோஸ் மேரி மற்றும் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேற்கண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கே.கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி விகரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” எனக்கூறிய நீதிபதிகள், கிருஷ்ணசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post மாஞ்சோலை தேயிலை தோட்டம் விவகாரம்; மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.