×

விபத்தில் 3 உயிர்களை இழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்ட அறிக்கை:
ராமநாதபுரம் மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சார்ந்த வரிசை கனி என்பவருக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆம்புலன்ஸ் வாலாந்தரவை அருகே கோர விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் சென்ற வரிசை கனி, அவரது மகள் அனீஸ் பாத்திமா, மருமகன் சகுபர் சாதிக் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, படுகாயம் அடைந்தவர்களில் வரிசை கனி, அனீஸ் பாத்திமா, சகுபர் சாதிக் ஆகிய மூவரும் சுமார் 2 மணி நேரம் சிகிச்சை கிடைக்கப் பெறாமல், தாமதப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆகவே, தமிழக அரசு இந்த விபத்தில் 3 உயிர்களை இழந்த குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விபத்தில் 3 உயிர்களை இழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : STBI ,Chennai ,state ,vice president ,Abdul Hameed ,Vairagani ,Maraikayar Pattinam ,Ramanathapuram ,Ramanathapuram Hospital ,Dinakaran ,
× RELATED ஜனநாயக கிறிஸ்தவ மக்கள் முன்னணி எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்தது