திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.64 லட்சம் வசூல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில், 9 நாட்களில் ரூ.64 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், கோயில் உண்டியல்களில் நகை, பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்தநிலையில் புத்தாண்டு மற்றும் திருப்படி திருவிழாவையொட்டி கடந்த ஒரு வாரமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று கோயிலில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் கடந்த 9 நாட்களில் ரூ.64 லட்சத்து 72 ஆயிரத்து 765 ரூபாயும், 47 கிராம் தங்கமும், 2,975 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.64 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: