புழல்: துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக இளைஞரணி சார்பில் பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க மோதிரத்தை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், நவம்பர் 27ம் தேதி பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் குழந்தைகளுக்கான பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலாளரும், சோழவரம் ஒன்றியக்குழு துணை தலைவருமான வே.கருணாகரன், சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.கே.இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கி, 3 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தைகளுக்கான பெட்டகங்கள் வழங்கினார்.
இதில் செங்குன்றம் பேரூராட்சி துணை தலைவர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி புள்ளிலைன் மு.ரமேஷ், சோழவரம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் காசிம் முகம்மது, வீரம்மாள், பொன்.கோதண்டன், கலை இலக்கியம் பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் பரசுராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஞானம், ஒன்றிய கவுன்சிலர் மாலதி மகேந்திரன், நெற்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துளசி ராஜேந்திரன், சோழவரம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், ஜெகன், விஜய், புழல் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் டேவிட், புழல் ஒன்றிய நிர்வாகிகள் திராவிட டில்லி, தேரா அருண்குமார், முஜீப், செபாஸ்டின் உள்ளிட்ட மாவட்ட அணிகள், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post துணை முதல்வர் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாதவரம் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.