தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சுமார் 90 சதவீத ஆர்டர்களுக்கு காலண்டர்கள் அனுப்பும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள ஆர்டர்களை, இன்னும் ஒரு சில நாட்களில் அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் ரூ.400 கோடி அளவிற்கு இருந்ததாக காலண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிவகாசி பகுதியில் உள்ள காலண்டர் தயாரிப்பாளர்கள், அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
இதுகுறித்து காலண்டர் தயாரிப்பாளர்கள் கூறும்போது, ‘‘புத்தாண்டிற்கான தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணிகளும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு காலண்டர் விற்பனை கடந்த ஆண்டு போன்றே இருந்தது. அடுத்த புத்தாண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணிகள் மீண்டும், வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று, தமிழ் பஞ்சாங்கம் வெளியானவுடன் துவங்கும்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
The post குட்டி ஜப்பானில் புத்தாண்டு ‘கெத்து’ரூ.400 கோடிக்கு காலண்டர் விற்பனை: அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.