தர்மபுரி, ஜன.1: ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று தர்மபுரி உழவர் சந்தைக்கு நுகர்வோர் வருகை அதிகரித்தது. தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி 110 விவசாயிகள் மூலம், ₹8 லட்சம் மதிப்புள்ள 30 டன் காய்கறி, பழம் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை, 6 ஆயிரம் நுகர்வோர்கள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை மற்றும் மாலை நேர தர்மபுரி உழவர் சந்தைக்கு 8 ஆயிரம் நுகர்வோர் வந்து சென்றனர். 60 வகையான காய்கறி, பழங்கள் செய்யப்பட்டது. மொத்தமாக 38 டன் காய்கறி, பழங்கள் ₹16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உழவர் சந்தையில் நுகர்வோர் கூட்டம் அலை மோதியதால், சாலையின் இருபுறத்திலும் டூவீலர், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தர்மபுரி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் ஊழியர்கள் கூட்டத்தை ஒழுங்குப் படுத்தினர்.
The post தர்மபுரி உழவர் சந்தையில் 38 டன் காய்கறி விற்பனை appeared first on Dinakaran.