×

இரும்பு தகடுகளை திருடியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.4: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியில், பிஎஸ்என்எல் டவர் மற்றும் தொலை தொடர்பு நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்(43) இளநிலை தொலை தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 1ம்தேதி இரவு, மர்ம நபர்கள் தொலை தொடர்பு நிலைய ஜன்னலை உடைத்து உள்ளே சென்று இரும்பு தகடுகள் 45 கிலோவை திருடி சென்றனர். மறுநாள் அலுவலகம் சென்ற செந்தமிழ், இரும்பு தகடுகள் திருடப்பட்டதை பார்த்து, ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், எஸ்ஐ கெய்க்வாட் விசாரணை நடத்தி, இரும்பு தகடுகளை திருடி சென்ற கவுண்டம்பட்டியை சேர்ந்த தொழிலாளி சக்திவேல்(25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து இரும்பு தகடுகளை பறிமுதல் செய்தார். தொடர்ந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தார்.

The post இரும்பு தகடுகளை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pappireddipatti ,BSNL ,Goundampatti ,Senthamizh ,Veppamarathur ,Dinakaran ,
× RELATED கேண்டீன் நடத்த மகளிர் குழுவினருக்கு அழைப்பு