×

சூளகிரி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சூளகிரி, ஜன.4: சூளகிரி ஊராட்சியில் ஓசூர் – கிருஷ்ணகிரி சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர், சாலையில் வழிந்தோடி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் தேங்குகிறது. இதனால் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் இடமாக மாறியுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து, தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சூளகிரி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Choolagiri road ,Choolagiri ,Hosur-Krishnagiri road ,National Highway ,Choolagiri… ,Dinakaran ,
× RELATED ஒற்றை யானை விரட்டியடிப்பு