×

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜன.16 முதல் 19 வரை ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்: முன்பதிவு செய்து பயணிக்கலாம்

ஊட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி சிறப்பு மலை ரயில் ஜனவரி 16 முதல் 19ம் தேதி வரை இயக்கப்படுகிறது. முன் பதிவு செய்து சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம். நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ வசதியாக சிறப்பு மலை ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 16ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை 4 நாட்கள் குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. குன்னூரில் காலை 8.20க்கு புறப்பட்டு 9.40க்கு ஊட்டி வந்தடையும். இதேபோல், ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 10.30க்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும். இரண்டாவது சுற்று 11.30க்கு ஊட்டியில் புறப்பட்டு 12.10க்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 12.40க்கு புறப்பட்டு மதியம் 1.10க்கு ஊட்டி வந்தடையும். மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு 3.30க்கு கேத்தி சென்றடையும். 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30க்கு ஊட்டி வந்தடையும்.

இரு சேவைகளிலும் முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். இதேபோல் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜனவரி 16,18 தேதிகளில் மேட்டுபாளையத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மதியம் 2.25க்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் 17,19 ஆகிய தேதிகளில் காலை 11.25க்கு ஊட்டியில் புறப்பட்டு மாலை 4.20க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளுடனும், குன்னூர் – ஊட்டி இடையே 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளுடன் இயக்கப்படும். சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜன.16 முதல் 19 வரை ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்: முன்பதிவு செய்து பயணிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Pongal festival ,Ooty Special Mountain Train ,Nilagiri District ,Metuppalayam ,Ooty ,Ooty Special Mountain Train Movement ,and Ride ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களில் கோலப்பொடி விற்பனை துவங்கியது