×

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத் தொகுப்பு கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்; பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் செய்ய அரசு ரூ.77 கோடி ஒதுக்கியது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புகளை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

கரும்பு கொள்முதல் செய்வதில் விவசாயிகள் தரப்பில் இருந்து எந்த புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. இடைத்தரகர்கள், வியாபாரிகள், பிற மாநிலங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யக்கூடாது. கரும்பு விளைவிக்கப்படாத மாவட்டங்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யலாம். ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் இருந்து ஒட்டு மொத்தமாக கரும்பு கொள்முதல் செய்யக்கூடாது. கரும்பு கொள்முதல் செய்யும்போது சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

கொள்முதல் செய்த கரும்புக்கு அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குக்கு மின்னணு பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

The post பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Pongal festival ,Pongal ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஒருவர்...