×

விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தையின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷ்மியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Wickravandi ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Mu. K. Stalin ,Lia Lakshmi ,Viluppuram district ,Vikriwandi Circle ,Wikiravandi West Village ,Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டியில் பள்ளி கழிவு நீர்...